மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல்
05-Jun-2025
காரைக்கால் : காரைக்காலில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பள்ளி அருகில் சிகரெட், பீடி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், போலீசார் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் திருப்பட்டினம் பகுதி தேவராஜன், கிருபாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2,500 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
05-Jun-2025