உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் வர்த்தகத்தில் 2 பேர் ரூ. 31.91 லட்சம் இழப்பு

ஆன்லைன் வர்த்தகத்தில் 2 பேர் ரூ. 31.91 லட்சம் இழப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து பெண் உட்பட 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 31.91 லட்சம் இழந்துள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகனை சென்னையை சேர்ந்த தர்ஷன் என்பவர் தொடர்பு கொண்டு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதைநம்பி, பழனிசாமியின் மகன் அவர் தெரிவித்த வர்த்தக நிறுவனத்தில் பல்வேறு தவணைகளாக 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மனோகிரி என்பவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி, மனோகிரி 16 லட்சத்து 51 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின்னர், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன் மூலம் கிடைத்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. மேலும், ஓயிட் டவுன் பகுதியை சேர்ந்த கவுசல்யா 66 ஆயிரத்து 500, வேல்ராம்பட்டைச் சேர்ந்த கவுதமன் 50 ஆயிரம், கோர்காட்டைச் சேர்ந்த கவுசல்யா 28 ஆயிரம், உழவர்கரைச் சேர்ந்த மஞ்சினி 14 ஆயிரத்து 500 என 6 பேர் மோசடி கும்பலிடம் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை