உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பெண்கள் மாயம் போலீஸ் விசாரணை

2 பெண்கள் மாயம் போலீஸ் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில் இரண்டு பெண்கள் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி புதுசாரம், முத்துரங்கசெட்டி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் மதுமித்ரா, 18; தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., படித்து வந்தார். இவர், பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பழகியதால், பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், நேற்று காலை கல்லுாரிக்கு சென்ற மதுமித்ரா வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.சேதராப்பட்டு, மயிலம் ரோட்டை சேர்ந்த தசரதன் மகள் அபிநயா, 19; தந்தை இறந்து விட்டதால், தாய் கவனித்து வந்தார். மயிலம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அபிநயா, கடந்த 7ம் தேதி, பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவல்லை. அவரது தாயார் அல்லியம்மாள் அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி