உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். இடையன்சாவடி சாலையில் இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது இருவரும் தப்பிக்க முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், சாரம் சின்னையம் பேட்டையை சேர்ந்த மணி மகன் தனுஷ், 23; தனுஷ்கோடி மகன் கார்த்திக்ராஜ், 20; என்பதும், இருவரும் விற்பனைக்காக 6 சிறிய பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ