உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  23 சுத்தமான குடிநீர், தரமான சாலை தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உறுதி

 23 சுத்தமான குடிநீர், தரமான சாலை தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உறுதி

புதுச்சேரி: மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன், இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அரியூர் கிராமத்தில் ஓட்டு சேகரித்தார். மங்கலம் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் நேற்று அரியூர் கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, கிராமத்தில் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் விநியோகிப்பதாகவும், வடிகால் வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் முறையிட்டனர். அதற்கு அவர், தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்தால் சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைக்கவும், வாய்க்கால், சாலைகள் தரமாகவும் அமைத்துத் தருவேன் என, உறுதியளித்தார். ஓட்டு சேகரிப்பின் போது, தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பா, தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ