மேலும் செய்திகள்
கோர்ட் நடவடிக்கை: பார்வையிட்ட மாணவிகள்
03-Aug-2025
புதுச்சேரி : தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம் சட்ட உதவி மையங்களை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பணிகள் ஆணையம் சார்பில், தமிழ்நாட்டில் திருச்சி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரியில் ஏம்பலம் பகுதியிலும் 24 மணி நேர சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா, திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் நிர்வாக தலைவர் சூர்யகாந்த் பங்கேற்று, சட்ட உதவி மையங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், விஸ்வநாதன், மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மனீந்திர மோகன், ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த், நீதிபதிகள், அரசுச் செயலர் (சட்டம்) கேசவன், சட்டத் துறை சார்பு செயலர் ஜான்சி மற்றும் வழக்கறிஞர்கள், புதுச்சேரி, ஏம்பலம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் விழாவில் கலந்துகொண்டனர்.
03-Aug-2025