உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து 25 சவரன் நகை கொள்ளை பண்ருட்டி அருகே துணிகரம்

வீடு புகுந்து 25 சவரன் நகை கொள்ளை பண்ருட்டி அருகே துணிகரம்

பண்ருட்டி ; பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி அருந்ததி, 60; இவரது இரு மகன்கள் வெளிநாட்டில் இன்ஜினியர்களாக பணிபுரிகின்றனர். கணவர் இறந்த நிலையில், அருந்ததி தனது மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார்.அருந்ததி தனது குடும்பத்துடன் கடந்த 2ம் தேதி மந்திராலயம் கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள், அருந்ததிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், 65,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ