உள்ளூர் செய்திகள்

28ம் தேதி மகா யாகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 6ம் ஆண்டு சமஷ்டி, ரிக், யஜூர், உபாகர்மா மற்றும் காயத்ரி ஜபம், மகா யாகம் வரும் 28ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி கோவில் அர்ச்சகர் அந்தணர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஆர்ய வைஸ்ய ஆன்மிகக்குழு  சார்பில், 6ம் ஆண்டு மகா யாகம் நடைபெறுவதையொட்டி, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் சின்மயா சூர்ய மகாலில், வரும் 27ம் தேதி, காலை 5:00 மணிக்கு சூரிய பூஜை மற்றும் கோ பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பிரிவு வீதம் உபாகர்மா நடைபெற உள்ளது. தொடர்ந்து, 28ம் தேதி காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை காயத்திரி ஜபம், மகா யாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ