இளநிலை மருத்துவ படிப்பிற்கு 2ம் சுற்று கலந்தாய்வு பட்டியல்
புதுச்சேரி : இளநிலை மருத்துவ படிப்பிற்கான 2ம் சுற்று கலந்தாய்டு பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. சென்டாக் நிர்வாகம் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. அதில், முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 2ம் சுற்று கலந்தாய்விற்கான பதிவு மற்றும் விருப்ப பாட தேர்வு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2ம் சுற்று கலந்தாய்விற்கான திருத்தப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு வாரியாக சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.inவெளியிடப்பட்டுள்ளது. 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கான 'மாப்-ஆப்' கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்களின் தற்காலிக ஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை ஆணையை பதிவிறக்கம் செய்துகொண்டு, அசல் சான்றிதழ்களுடன் நாளை 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.