குட்கா பதுக்கிய 3 பேர் கைது
திருபுவனை : திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். திருவாண்டார்கோவில் அரசுப் பள்ளி அருகே நின்றிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சாக்கு மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது சஜித் 35; அப்சர்கான் 25; என்பதும்,இருவரும் மொத்த வியாபாரியான சஜித்கான் 35; என்பவரிடம்விற்பனையாளராக வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், திருவாண்டார்கோவில் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த191 கிலோ, 670 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1.30 லட்சம் ரூபாய் ஆகும். அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு ஸ்கூட்டர், 3 மொபைல் போன்கள், 4,320 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.