உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் தேங்கி வரும் புகார்களை குறித்த காலத்திற்குள் தீர்வு காண தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் மாவட்ட நுகார்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. அதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைத்தில் இருந்து 10 வழக்குகள் சமாதானத்திற்கானதாக கண்டறியப்பட்டு, இவ்வழக்குகள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டது.அதில் 3 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டு, வழக்காளிகளுக்கு ரூ.11 லட்சத்து 57 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் கோவிந்தராஜி, பாலாஜி, வேல்முருகன், அம்பலவாணன், சட்டக் கல்லுாரி மாணவர்கள், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர் ஆணைய பதிவாளர் விஜயா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Selvaraj
ஜூன் 01, 2025 10:07

ஆமாம். நுகர்வோர் ஆணையங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நுகர்வோர் ஆணையம் மட்டுமல்ல, நுகர்வோர் சட்டமும் கூறுகின்றது. ஆனால் கொடுமை என்னவென்றால் மூன்று வருடங்களுக்கு மேலாகியும் நான் பதிவிட்டுள்ள ஒரு வழக்கு முடிக்கப் படாமலிருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இவ்வழக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பாக தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீதே ஆணையம் தவறை திருத்திக் கொள்ள மூன்று வருடங்களுக்கு மேலாகியும் முடியவில்லை என்பதே. சட்டத்தை சம்பந்தப்பட்டவர்களே மதிப்பதில்லை. அறிவுரைகள் மற்றவர்களுக்குத் தான், தமக்கே அல்ல..


சமீபத்திய செய்தி