உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

 3 உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜய் ஆதரவுடன், உருளையன்பேட்டை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., குக்கர் சின்னத்தில் ஓட்டு சேகரித்தார். உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு சஞ்சய்காந்தி நகர், பாவேந்தர் வீதி, வ.உ.சி வீதி, தமிழ் மகள் வீதி, ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது கட்சி தொண்டர்கள், அப்பகுதியினர் மாலை அணிவித்து, வரவேற்பு கொடுத்தனர். இந்த பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க, சுதேசி மில் வளாகத்தில் உள்ள இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை சுத்திகரிக்கும் வழியில் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் சுத்தமான குடிநீர் வீடுகளுக்கு விநியோகிக்கும் வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில், மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர, குக்கர் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றியடைய செய்யுங்கள் என பொதுமக்களிடம் தீவிரமாக ஓட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட நேரு எம்.எம்.ஏ., வுடன், உருளையன்பேட்டை தொகுதி த.வெ.க., பிரமுகர்கள், நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும், அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை