மேலும் செய்திகள்
கடற்கரையில் மீன் திருடிய பெண் உட்பட இருவர் கைது
08-Oct-2024
அரியாங்குப்பம், : ஈடன் கடற்கரை குடோனில் புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில், ஈடன் கடற்கரை உள்ளது. தனியார் மூலம் கடற்கரை பராமரிப்பு செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின், பொருட்கள் வைக்கும் குடோன், கடற்கரையோர பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம், இரவு மூன்று பேர் குடோனில் புகுந்து பொருட்களை திருடினர். அதையடுத்து, கடற்கரையை பராமரிக்கும் நிறுவனத்தின், சிறப்பு அலுவலர் ஆறுமுகம் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கோரிமேடு ராஜா (எ) ராஜன்,42; கடலுார் மாவட்டம், புவனகிரி சிலம்பரசன், 32; கோயம்புத்துார் சூர்யா, 29; ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் கோரிமேட்டில் தங்கி பல்வேறு இடங்களில் திருடி வருவது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், குடோனில் இருந்து திருடி மின் ஓயர்கள், மின் மோட்டார், இரும்பு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
08-Oct-2024