உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டல் ரவுடி உட்பட 3 பேர் கைது

 கத்தியை காட்டி மிரட்டல் ரவுடி உட்பட 3 பேர் கைது

அரியாங்குப்பம்: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் அம்பேத்கர் நகரில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கத்தியுடன் நின்ற இரண்டு பேரை பிடித்து, விசாரித்தனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ், 22; ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. மற்றொருவர் நைனார்மண்டபத்தை சேர்ந்த தினேஷ்குமார், 19; என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், கோரிமேடு கனரக ஊர்திமுனையம் அருகில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய நெல்லித்தோப்பை சேர்ந்த ரிஷிகுமார், 26, என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை