உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 பேரிடம் ரூ. 64 ஆயிரம் மோசடி

 3 பேரிடம் ரூ. 64 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 64 ஆயிரம் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர், தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அவரது கார்டு கணக்கில் இருந்து, மர்ம நபர்கள் மோசடியாக ரூ. 53 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர். இதேபோல், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ரூ. 10 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ரூ.1000 என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 64 ஆயிரம் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !