உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 பேரிடம் ரூ.41 ஆயிரம் மோசடி

 3 பேரிடம் ரூ.41 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: 3 பேரிடம் ரூ.41 ஆயிரத்தை ஆன்லைன் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். நெட்டபாக்கம் சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கி அதிகாரி போல் பேசி, அவரின் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், மர்ம நபருக்கு கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தார். இதனையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து 24 ஆயிரத்து 865 ரூபாய் மாயமாகியது. இதேபோல், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த நபரிடம் 15 ஆயிரம் ரூபாய். முதலியார்பேட்டையை சேர்ந்த நபரிடம் ஆயிரத்து 720 ரூபாய் என மொத்தம் 41 ஆயிரத்து 585 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை