உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 பேரிடம் ரூ.96 ஆயிரம் மோசடி

 3 பேரிடம் ரூ.96 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 3 பெண்கள் ரூ. 96 ஆயிரம் இழந்துள்ளனர். மூலக்குளத்தை சேர்ந்த பெண், பிஎச்.டி., ஆய்வு கட்டுரை தயார் செய்வது தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, வந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து, எதிர்முனையில் பேசிய மர்மநபர், ஆய்வு கட்டுரை தயார் செய்து வழங்குவதற்கு கட்டணம் செலுத்தும் படி கூறியுள்ளார். அதைநம்பி அப்பெண் மர்மநபருக்கு ரூ. 51 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல், கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பெண் 40 ஆயிரத்து 100, கருவடிக்குப்பத்தை சேர்ந்த பெண் 5 ஆயிரம் என 3 பெண்கள் மோசடி கும்பலிடம் ரூ. 96 ஆயிரத்து 100 இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை