4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் புதிய பொறுப்பு ஒதுக்கீடுசெய்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீஸ் பயிற்சி மற்றும் நலத்துறை சீனியர் எஸ்.பி., ராஜேந்தர் குமார் குப்தா, போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தீபிகா ஐ.பி.எஸ்., கடலோர பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு சீனியர் எஸ்.பி.,யாகவும், சிகாந்தர் சிங் ஐ.பி.எஸ்., போலீஸ் பயிற்சி மற்றும் நலத்துறை சீனியர் எஸ்.பி.,யாகவும், அனுராக் சோப்ரா ஐ.பி.எஸ்., சைபர் கிரைம் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.