உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடுப்பு கட்டையில் கார் மோதல் 4 பேர் காயம்

தடுப்பு கட்டையில் கார் மோதல் 4 பேர் காயம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் 26; இவரது உறவினர் நித்யா 42; கன்னியக்கோவிலை சேர்ந்த பாலாஜி 26; ஆகியோர், நேற்று முன்தினம் சுசூகி எக்ஸ்.எல்., 6 மாடல் காரில், கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை, பனித்திட்டு சபரிநாதன் 35; என்பவர் ஓட்டினார். அரியாங்குப்பம் புதிய பாலத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் நடுவே இருந்த தடுப்பு கட்டை மற்றும் மின் கம்பங்களில் மோதி நின்றது.டிரைவர் உள்பட நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து,கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ