உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மழை வெள்ளத்திற்கு 4 பேர் பலி

புதுச்சேரியில் மழை வெள்ளத்திற்கு 4 பேர் பலி

புதுச்சேரி: பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 47 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால், புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.கவர்னர் ஆய்வுபுதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாத், படகில் சென்று ஆய்வு செய்தார்100 பேர் மீட்புபுதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தத்தளித்த 100 பேரை ராணுவத்தினர் மீட்டனர். கிருஷ்ணா நகர் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ