மேலும் செய்திகள்
மகள் மாயம்; தந்தை புகார்
27-May-2025
ஜித்து அதிரடி Qualifier 1ல் RCB
28-May-2025
அரியாங்குப்பம்:நகை திருட்டு வழக்கில், பெண்ணை துன்புறுத்தியாக எழுந்த குற்றச்சாட்டில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரசி, 37. இவர், புதுகுப்பம் தனியார் நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வந்தார். ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணியின் நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து, சுற்றுலா பயணி கடந்த 11ம் தேதி தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டலில் வேலை பார்த்த கலையரசி உட்பட 5 பேரை அழைத்து சென்று காவல் நிலையத்தில், விசாரணை நடத்தினர். தகவலறிந்த கலையரசியின் கணவர் அர்சுனன், 52, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி இறந்தார்.விசாரணை என்ற பெயரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா உட்பட 5 போலீசார் துன்புறுத்தினர் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலையரசி, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள், கம்யூ., சார்பில், பெண்ணை துன்புறுத்திய, சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் கண்டன ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா, சீனியர் ஏ.எஸ்.ஐ., சுரேஷ், போலீசார் வசந்தராஜா ஆகிய மூன்று பேரும் நேற்று அதிரடியாக, ஆயுதப்படை பிரிவுக்கு நேற்று இடம் மாற்றப்பட்டனர். மகளிர் ஊர்காவல்படை வீரர் பிருந்தா, கோரிமேடு தலைமை ஊர்காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிரப்பித்தார். சப் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் அதிரடியாக மற்றம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27-May-2025
28-May-2025