உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதியம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதியம்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பி.ஆர்.டி.சி,. ஊழியர்களுக்கு 40 சதவீதம் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின்(பி.ஆர்.டி.சி.,) தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்குவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை ஏதுவாகவும், தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், அக்டோபர் மாத ஊதியத்தில் தற்போது 40 சதவீதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 சதவீத ஊதியத் தொகையானது, அரசிடமிருந்து நிதி வரப்பெற்றவுடன் விரைவில் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை பி.ஆர்.டி.சி., நிர்வாக பொது மேலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !