போலீஸ் மக்கள் மன்றத்தில் 44 புகார்களுக்கு தீர்வு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். புதுச்சேரி போலீஸ் நிலை யங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., ஸ்ருதி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோல், கரிக்கலாம்பாக்கத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுப்ரமணியன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தனர். தன்வந்தரி நகரில் எஸ்.பி., ரகுநாயகம், பாகூரில் எஸ்.பி., செல்வம் ஆகியோர் பொது மக்க ளிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர். இதில், பொது மக்களிடம் இருந்து 66 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.