உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கைது

மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கைது

புதுச்சேரி: பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை போலீசார் நேற்று (நவ.,10) மடுவுபேட் இ.சி.ஆர்., பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய லாஸ்பேட்டை பரந்தாமன் மகன் பிரவீன்,23; என்பவர் மீது ஆயுத வழக்குப் பதிந்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய லாஸ்பேட்டை நாராயணன்,29; என்பவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். சேதராப்பட்டு போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய தொண்டமாநத்தம் சரவணன்,22; என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று ஜவகர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். சமுதாய நலக்கூடம் அருகில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய பூமியான்பேட்டை முருகன்,27, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பாவாணர் நகர் பூங்கா அருகே பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய பூமியான்பேட்டை சதீஷ்,26, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ