உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  5 த.வெ.க., வேட்பாளர் ராமு பி.என்.பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு

 5 த.வெ.க., வேட்பாளர் ராமு பி.என்.பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: மணவெளி தொகுதி டி.என்.பாளையத்தில் த.வெ.க., வேட்பாளர் ராமு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மணவெளி தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் ராமு தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று டி.என்.பாளையத்தில் வேட்பாளர் ராமு வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு அப்பகுதி இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் திரண்டு ஆரத்தி எடுத்தும், பூக்கள் துாவியும் வரவேற்றனர். அப்போது, வேட்பாளர் ராமு கடந்த 5 ஆண்டா தொகுதி எந்தவித வளர்ச்சியின்றி பின் தங்கியுள்ளது. இத்தேர்தலில் தன்னை 'விசில்' சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், தொகுதியை வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்ற பாடுபடுவேன் என உறுதி அளித்தார். பிரசாரத்தில், கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ