உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதலியார்பேட்டையில் 52 பன்றிகள் பிடிப்பு

 முதலியார்பேட்டையில் 52 பன்றிகள் பிடிப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டை பகுதியில், சுற்றித்திரிந்த 52 பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி நகர பகுதிகளில் சாலை மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து, நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதையடுத்து, பன்றிகளால் நோய்கள் பரவுவதை தடுக்க, பன்றிகளை, ஏழு தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என, பன்றிகள் வளர்பவர்களுக்கு, கடந்த 27ம் தேதி, அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கால்நடை மருத்துவர் ஆர்த்தி தலைமையில், நகராட்சி சுகாதார ஊழியர்கள் நேற்று, முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு, முருங்கப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 52 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை