உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி: மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் தேங்கி வரும் புகார்களை, குறிப்பிட்ட கால கட்டத்தில், தீர்வு காணும் நோக்கில், புதுச்சேரி நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி நடந்தது.ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வில், மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 15 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு, பேச்சு வார்த்தை மூலம், 6 வழக்குகள் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில், ரூ. 2.61 லட்சம் ரூபாய், முறையீடட்டாளர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜ்பிரகாஷ், துணை தலைவர் இந்துமதி, வழக்கறிஞர்கள் இளஞ்செழியன், சேதுராமன், விமல், ராமதாஸ், சுதர்சனன், மகேஸ்வரி, ரவி உட்பட சட்ட கல்லுாரி மாணவர்கள், காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை