உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விதிமுறை கடைப்பிடிக்காத 64 மதுபான கடைகளுக்கு சீல்

 விதிமுறை கடைப்பிடிக்காத 64 மதுபான கடைகளுக்கு சீல்

புதுச்சேரி: தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, கலால்துறை விதிமுறைகளை கடைப்பிடிக்காத 64 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை கலால் துறை அறியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மதுபான கடைகளை சோதனை செய்ய கலால்துறை ஆணையர் விக்ராந் ராஜா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள், புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில், கலால்துறை விதிமுறைகளை கடைப்பிடிக்காத 64 மதுபானக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பல இடங்களில் உள்ள மதுபானக் கடைகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !