உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பேரிடம் ரூ. 2.90 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

7 பேரிடம் ரூ. 2.90 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

புதுச்சேரி,: புதுச்சேரியில் 7 பேர் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த ரவிந்திரன் என்பவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டிலிருந்தபடி பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.ரவிந்திரனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான லிங்க்கை அந்த நபர் அனுப்பியுள்ளார். இதைநம்பி, அந்த லிங்க் மூலம் ரவிந்திரன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 415 ரூபாய் முதலீடு செய்து, ஏமாந்தார். ஒயிட் டவுன் பகுதியை சேர்ந்த விஷால் வர்மா என்பவர் ஆன்லைனில் ரூ. 21 ஆயிரத்திற்கு பொருட்கள் ஆர்டர் செய்து ஏமாந்தார். தொண்டமாநத்தம் அமிர்தா கார்டனை சேர்ந்த சக்திவேல் 7 ஆயிரத்து 494 ரூபாய், தவளக்குப்பம் வசந்தி ஏழுமலை 10 ஆயிரத்து 500, அரியாங்குப்பம் அன்பரசி 34 ஆயிரம், காரைக்கால் ஜோசப் மேத்யூ 5 ஆயிரம், தட்டாஞ்சாவடி வீமன் நகர் ஆனந்த் 1,000 என, ஏழு பேர் 2 லட்சத்து 90 ஆயிரத்து 409 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை