7 பேரிடம் ரூ. 3.90 லட்சம் அபேஸ் மோசடி கும்பல் கைவரிசை
புதுச்சேரி: புதுச்சேரியில் மோசடி கும்பலிடம் 7 பேர் 3.90 லட்சம் ரூபாயை ஏமாந்துள்ளனர்.முத்தியால்பேட்டையை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பிய அவர், மர்மநபர் தெரிவித்தபடி, ஆன்லைனில் 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின், அதில் சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பின் அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியததால், அவர், ஏமாற்றப்பட்டது தெரிந்தது.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் 27 ஆயிரம், மேரி உழவர்கரையை சேர்ந்த நபர் 21 ஆயிரம், பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 500, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் 25 ஆயிரம், முதலியார்பேட்டைச் சேர்ந்தவர் 8 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்த பெண் 11 ஆயிரத்து 500 என, மொத்தம் 7பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.