உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொள்ளையடிக்க கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது 

கொள்ளையடிக்க கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது 

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கொள்ளையடிக்க கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் இருந்து பூத்துறை செல்லும் சாலையோரம் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றபோது, அந்த கும்பல் தப்பியோடியது.போலீசார் மடக்கி விசாரித்தபோது, சாணரப்பேட் சிவபாலன், 30; பிரவீன்ராஜ் (எ) ஸ்மைலி, 26; ராஜதுரை, முத்திரைப்பாளையம் மனோகரன், காந்திதிருநல்லுார் சஞ்சய், விவேக், வசந்தகுமார் என தெரியவந்தது. அவர்கள், கத்தியுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது. 7 பேரையும் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !