உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேபிள் ஒயர்களுடன் எரிந்த மின் கம்பத்தால் பரபரப்பு

கேபிள் ஒயர்களுடன் எரிந்த மின் கம்பத்தால் பரபரப்பு

புதுச்சேரி:கேபிள் ஒயர்களுடன் மின்கம்பம் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி வழுதாவூர் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று மாலை 6.30 மணியளவில் மின்கம்பம் ஒன்று கேபிள் ஒயர்களுடன் திடீரென பற்றி எரிந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின்கம்பத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கண்ட வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்லாதவாறு பொதுமக்களே தடையை ஏற்படுத்தி, டி.நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து மின்கம்பத்தில் பரவிய தீயை அணைத்தனர்.விசாரணையில் மின்கம்பத்தின் மின் இணைப்புகளில் மின்கசிவு ஏற்பட்டு, அது அப்படியே கேபிள் ஒயர்களிலும் தீப்பற்றி அசம்பாவிதம் நடந்துள்ளது தெரிய வந்தது. நகரின் பிரதான சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில் தெரு விளக்குகளுக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களின் டி.வி., கம்பிவடங்கள், கேபிள் டி.வி., ஒயர்கள், பிராண்டுபான்ட் ஒயர்கள் எந்தவித முன் அனுமதியின்றி கண்டமேனிக்கு கட்டப்பட்டு வருகின்றன. இது போன்று அடிக்கடி பற்றி எரிந்து மின்சாரத்தினை துண்டிப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகின்றன. மின்கம்பங்களில் தாறுமாறாக செல்லும் கேபிள் ஒயர்களை முறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை