உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: டி. நகர் போலீசார் நேற்று (நவ.,16) பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட லாஸ்பேட்டை சபரிதாஸ்,32; திலாஸ்பேட்டை வீமன் நகர் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த திண்டிவனம் இன்பராஜ்,35; கோரிமேடு ஆம்புலன்ஸ் ஸ்டாண்ட் அருகில் ரகளை செய்த வானுார் ஆறுமுகம்,45; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் போலீசார் நேற்று பைபாசில் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகில் ரகளை செய்த கடலுார் அன்பு,33; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உருளையன்பேட்டை போலீசார் நேற்று புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெண்களை பாட்டுப் பாடி கிண்டல் செய்த திருச்சி மாவட்டம், குணசீலன்,41; கடலுார் வெற்றிவேல்,33; நெல்லித்தோப்பு முரளிதாஸ்,47; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை