உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 8 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 8 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: டி நகர் போலீசார் டிரெக் டெர்மினல் பகுதியில் நேற்று (நவ.,5) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த நாவற்குளம், சேஷாத்திரி, 39; லாஸ்பேட்டை சிவசந்திரன்,38; சண்முகாபுரம், கவுதம்,28; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மூலகுளம் ஜான்குமார் நகரில் குடிபோதையில் ரகளை செய்த தர்மாபுரி அந்தோணி ஜீவராஜ்,37, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை பகுதியில் ரகளை செய்த மூலகுளம் ராஜாராம்,53, மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று பிம்ஸ் மருத்துவமனை பின்புறம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த, கிளியனுார் சுப்ரமணி மகன் திருமூர்த்தி, 24, மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பள்ளூர் போலீசார் நேற்று சேக்லி–பரல் மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தலசேரி பிரமோத்தாஸ்,42, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதே போல், மக்குனி–கொப்பளம் மெயின்ரோட்டில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தலசேரி பனுார் உமேஷன்,45; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !