உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தை அபகரித்த நபர் மீது வழக்கு பதிவு

இடத்தை அபகரித்த நபர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: வேலுார் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் சண்முகம் மகள் சங்கீதா, 27. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது. இந்த இடத்தை சாரம் நல்லகிணற்று வீதியில் வசிக்கும் சண்முகத்தின் உறவினரான எலக்ட்ரீஷியன் ராம் என்பவர் பராமரித்து வந்தார். இதற்கிடையே, சங்கீதாவின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அதற்கு முன்பாகவே கோரிமேட்டில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை தனது மகள் சங்கீதா பெயருக்கு கிரயம் செய்து கொடுத்திருந்தார். இந்நிலையில், தனது பெயரில் உள்ள இடத்தை பார்ப்பதற்காக சங்கீதா புதுச்சேரிக்கு வந்தபோது அந்த இடத்தில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது, தனக்கு தெரியாமல் அந்த இடத்தை ராம் ஓட்டல் நடத்துவதற்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த சங்கீதா, இதுகுறித்து ராமிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராம் சங்கீதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கீதா உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராம் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை