தார் உருக்கும் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு
பாகூர்: சாலை அமைக்கும் பணியின் போது, தார் உருக்கும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் சேதமான சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்க பயன்படும், தார் இயந்திரத்தின் மூலமாக உருக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, மாலை 5:00 மணியளவில் திடீரென தார் உருக்கும் இயந்திரம் அதிக வெப்பம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.