அரசு பள்ளியில் முப்பெரும் விழா
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில், முன் மழலையர் மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு பழங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்து விளக்கினர்.அன்பாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சசிகுமாரை தலைமையாசிரியர் திலகவதி சால்வை அணிவித்து பாராட்டினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுரேஷ், ரேஷ்மி, சிவமுருகன், முரளிதாசன், வாழுமுனி, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.ஆசிரியர் செந்தமிழ் நன்றி கூறினார்.