உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய், தந்தை சண்டையால் மகன் துாக்கிட்டு தற்கொலை பெற்றோருக்கு உருக்கமான கடிதம்

தாய், தந்தை சண்டையால் மகன் துாக்கிட்டு தற்கொலை பெற்றோருக்கு உருக்கமான கடிதம்

புதுச்சேரி : தாய், தந்தை சண்டையால் மன உலைச்சலுக்கு ஆளான மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி ஜான்பால் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி செரினா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சஞ்சய், 19; ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். 2வது மகன் பிளஸ் 2, மூன்றாவது மகன் 10ம் வகுப்பும், 4வது மகள் 1ம் வகுப்பு படித்து வருகின்றனர். வினோத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதை சஞ்சய் கண்டித்துள்ளார். மேலும் இதனால் வாடகை குடியிருந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் வீட்டையும் 3 மாதத்திற்கு முன்பு காலி செய்து, ஜான்பால் நகரில் குடியேறினர். கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மகளை மட்டும் வினோத் அழைத்து சென்று விட்டார்.இதனால் மனமுடைந்த சஞ்சய் ஜான்பால் நகர் வீட்டில் தனது கைகளை ஷூ லேஸ் மூலம் கட்டி கொண்டு, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியபோது, சஞ்சய் தனது பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில், அம்மா, அப்பா நீங்கள் சண்டையிட்டு கொள்வது எனக்கு மிகுந்த அவமானமாக உள்ளது. 19ம் தேதி நான் சாக முடிவெடுத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இனியாவது சண்டை போடமல் இருங்கள், நீங்கள் ஒற்றுமையாக வாழ்வதை நான் பார்க்க முடியாது என உருக்கமாக எழுதியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை