உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டின் கதவை உடைத்து ரூ.8.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை காலாப்பட்டு அருகே துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து ரூ.8.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை காலாப்பட்டு அருகே துணிகரம்

புதுச்சேரி : புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.8.40 லட்சம் மதிப்புடைய 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த கனசெட்டிக்குளம் அமைதி நகரை சேர்ந்தவர் காசிலிங்கம் 43; கனடா நாட்டில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சந்தியா, 38; தனது இரு மகன்களுடன் வசித்துவருகிறார்.சந்தியா சின்னக்காலாப்பட்டு கோவில் கும்பாபிஷேகதிற்கு செல்வதற்கு கடந்த 10ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்றவர், பின்னர் பெரியகாலாப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் தீர்த்தம், கொடுப்பதற்காக கணவர் காசிலிங்கத்தின், அண்ணன் ஏழுமலை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சந்தியா வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தகவல் அறிந்த வந்த சந்தியா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.8.40 லட்சம் மதிப்புடைய 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்.இது குறித்து சந்தியா கொடுத்த புகார் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர்.தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ