உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

 திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

நெட்டப்பாக்கம்: திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெட்டப்பாக்கம், நேரு நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகன் உதயகுமார், 32; கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், தினமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நாகேஸ்வரியின் கணவர், மூத்த மகள் செல்வி, இளைய மகன் பாலாஜி ஆகியோர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருந்த ஒரு மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை