மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
புதுச்சேரி: திலாசுப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் 11ம் ஆண்டு, ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. இவ்விழாவை யொட்டி, நேற்று திலாசுப் பேட்டை அருகே உள்ள வலம்புரி முத்து விநாயகர் கோவிலில் இருந்து, மாட வீதி வழியாக பொதுமக்கள் பால்குடங்கள் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து, அம்மனுக்கு 108 பால்குட மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாரா தனை நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் நடந்த 108 திருவிளக்கு பூஜையில், பெண்கள் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனி தலைமையில் செய்திருந்தனர்.
19-Jul-2025