மேலும் செய்திகள்
ஊட்டியில் தயாராகும் மலர் தொட்டிகள்
15-Nov-2024
புதுச்சேரி: பஸ்சில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, 26 கிராம் தங்க செயினை திருடி சென்ற இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.பாகூர், திருமால் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி மலர்க்கொடி, 55. உடல்நிலை சரியில்லாததால், நேற்று காலை ஜிப்மருக்கு தனது மகளுடன் தனியார் பஸ்சில் சென்றுக் கொண்டிருந்தார். ராஜிவ் சதுக்கத்தில் 35 வயது பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார்.பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த பெண் குழந்தையை மலர்க்கொடியின் மடியில் அமர வைத்தார். சுப்பையா நகர் வந்ததும், அப்பெண் மலர்க்கொடியிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு இறங்கினார்.அப்போது, மலர்க்கொடி தனது கழுத்தில் அணிந்திருந்த 26 கிராம் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுப்பையா நகரில், குழந்தையுடன் இறங்கிய பெண், மலர்க்கொடியின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் இருந்த செயினை திருடி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து அப்பெண்ணை தேடி வருகின்றனர்.
15-Nov-2024