உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சரிடம் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு கோரிக்கை மனு

மத்திய அமைச்சரிடம் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு கோரிக்கை மனு

புதுச்சேரி : இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை புதுச்சேரியில் அமைக்கக்கோரி ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, புதுச்சேரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர் அமைப்பு நிர்வாகிகள் தீபன், அகில் சவுதாரி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், புதுச்சேரியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்லுாரி அமைக்க வேண்டும். இந்த தகவல் தொழில்நுட்பக் கல்லுாரி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற அதிநவீன துறைகளில் ஆராய்ச்சி மையமாக செயல்பட முடியும்.புதுச்சேரி, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்லுாரி நிறுவனம் அமைக்க சிறந்த இடமாக விளங்கும்.அதேபோல், புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் இந்தாண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அமுல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு போதிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை