உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி : புதுச்சேரி மூலகுளம் ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது.கல்லுாரி நிறுவனர் முருகேசன், துணை நிறுவனர் சத்யவேணி முருகேசன், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவனை இயக்குனர் வெங்கட்ராம், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவனையின் மருத்துவ இயக்குனர் ராஜன், கல்லுாரி தாளாளர் ஜாய்ஸ் வர்கீஸ், கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ரங்கநாத், இந்திர காந்தி அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் ஆகியோர் விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினர். விழாவில், 108 மாணவ, மாணவியர் பங்கேற்று, விளக்கேற்றி, உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேராசிரியர்கள், துணை முதல்வர், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.