உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கைக்கிலப்பட்டில் பயோ காஸ் குறித்து செயல் விளக்கம்

கைக்கிலப்பட்டில் பயோ காஸ் குறித்து செயல் விளக்கம்

திருக்கனுா : கைக்கிலப்பட்டில் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயோ காஸ் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவிகள் தாட்சாயணி, ஹரிணிகுமாரி, ஆர்த்தி, சாருஸ்ரீ, திவ்யதர்ஷினி, காந்தலட்சுமி, நாக சவுஜன்யா, காயத்ரி, கோபிகா, காயத்ரி, அபிநயா, காயத்ரி, தேவி வைஷ்ணவி ஆகியோர் காட்டேரிகுப்பம் பகுதியில் தங்கி 'ஊரக வேளாண் கள அனுபவ பணி' மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, கைக்கிலப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு பயோ காஸ் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்க முகாம் நேற்று முன்தினம் நடந்தது.இதில், மாணவிகள் பயோ காஸ் தயாரிப்பு முறைகள், அதன் பயன்கள், பயோ காஸ் அமைப்பதற்கு அரசு மூலம் அளிக்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை