உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு நடவடிக்கை

போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு நடவடிக்கை

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடன டியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டார். இதில், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சாந்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், பிரியா மற்றும் போலீசார் உடனிருந்தனர். இதேபோல், ரெட்டியார்பாளையத்தில் வடக்கு எஸ்.பி., ரகுநாயகம், தவளக்குப்பத்தில் தெற்கு எஸ்.பி., செல்வம், காலாப்பட்டில் எஸ்.பி., ஸ்ருதி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., பக்தவசலம் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர். இதில், பொது மக்களிடம் இருந்து 63 புகார்கள் பெறப்பட்டு, 35 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,க் கள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை