உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதல்வர் ரங்கசாமிக்கு நடிகர்கள் வாழ்த்து

 முதல்வர் ரங்கசாமிக்கு நடிகர்கள் வாழ்த்து

புதுச்சேரி: முதல்வராக பதவியேற்ற ரங்கசாமியை சினிமா நடிகர்கள் சதீஷ், தங்கதுரை ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சதீஷ் கதாநாயகனாகவும், காமெடி நடிகர் தங்கதுரை மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் 'அண்டகாகசம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்வர் வீட்டிற்கு வந்த நடிகர்கள் சதீஷ், தங்கதுரை ஷூட்டிங் மேனேஜர்கள் குமரன், ராஜ்குமார் மற்றும் பட குழுவினர் முதல்வராக பதவியேற்ற ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !