மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
58 minutes ago
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
1 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
2 hour(s) ago | 42
புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கணக்கியல் தொடர்பான தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு, 'தி ஆடிட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் சதர்ன் இந்தியா' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதுச்சேரி பொறையூரில் அமைந்துள்ள ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பட்டயக்கணக்காளர் படிப்புகளுக்கான நுழைவு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு பல்வேறு கணக்கியல் தொடர்பான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியும், கோவையில் உள்ள 'தி ஆடிட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் சதர்ன் இந்தியா' என்ற நிறுவனமும் இணைந்து அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் சிறப்பு பயிற்சி வழங்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.'தி ஆடிட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் சதர்ன் இந்தியா' நிறுவனத்தின் தலைவர்கள் ஈஸ்வர கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஆதித்யா கல்விக் குழுமத்தின் தாளாளர் அசோக் ஆனந்த் ஆகியோர், ஆதித்யா கல்விக் குழும நிறுவனர் ஆனந்தன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிறுவனர் ஆனந்தன் கூறும்போது, 'இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் அக்கவுண்டன்சி மற்றும் வணிகவியல் துறையில் சாதிக்க இருக்கிறது. அதற்கேற்ப ஆதித்யா கல்விக் குழுமம் தனது மாணவர்களை தயார்படுத்தி வருகிறது' என்றார்.
58 minutes ago
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 42