மணக்குள விநாயகர் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2023-26ம் ஆண்டு மாணவர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் வேலைவாய்ப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன், இணைச்செயலாளர் வேலாயுதம், பொருளாளர் ராஜராஜன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தனர். கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாசலபதி வாழ்த்தி பேசினார். கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கல்லுாரியின் வேலைவாய்ப்பு துறை டீன் கைலாசம், வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினர். கல்லுாரியில் 2023-26ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 450க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வேலைவாய்ப்பு மலர் வெளியிடப்பட்டது. அனைத்து துறைத் தலைவர்கள், துறை வாரியான வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலசெந்தில்குமார் நன்றி கூறினார்.