உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி துவக்கம்

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் நிதி உதவியோடு, 45 நாள் இலவச அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சிக்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் கலந்து கொண்டு சென்டரை துவக்கி வைத்தார். அக்ரி கணேஷ் அறக்கட்டளை நிறுவனர் அக்ரி கணேஷ் நோக்கவுரையாற்றினார். இந்தியன் வங்கி மாவட்ட முதன்மை மேலாளர் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். அரியூர் ஸ்டார் அக்ரி கிளினிக் நிறுவனர் ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு 45 நாட்கள் இலவச தொழில் முனைவோர் பயிற்சி செய்முறை மற்றும் கருத்தியல் முறை நடக்கிறது. நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், இந்தியன் வங்கி மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் வங்கியில் உள்ள திட்டங்கள், கடன் பெறும் முறைகள் குறித்து விளக்கினர். 25க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யா, தமிழரசன், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை